இலங்கை தலைமன்னார் ஊருமலை பகுதியில் சட்ட விரோதமாக சுற்றித்திரிந்த  இந்தியர் ஒருவர் கைது!

இலங்கை, தலைமன்னார், ஊருமலை பகுதியில் சட்ட விரோதமாக சுற்றித்திரிந்த  இந்தியர் ஒருவரை, இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்து உள்ளனர்.

அவரிடமிருந்து 1200 கிராம் கஞ்சா, ஒரு சாதாரண மொபைல் போன்,  02 சிம் கார்டுகள், 03 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஒரு  20 ரூபாய் இந்திய பணம் மற்றும்   200  ரூபாய் இலங்கை பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக தலைமன்னார் போலிசாரிடம்  ஒப்படைத்தனர்.

-என்.வசந்த ராகவன்.

 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் காவல்துறையில் அதிரடி மாற்றம்!
ஆளுநர் மாளிகை முன்பு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தொடர் போராட்டம்!-அதிவிரைவுப் படையின் உதவியோடு வெளியேறிய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி!

Leave a Reply