இலங்கை சபாநாயகருடன் கடற்படைத் தளபதி சந்திப்பு!

இலங்கை கடற்படையின் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சிலவா இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவை பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகத்தில் (பிப்ரவரி 07)  சந்தித்தார். பியல் த சிலவா கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் சபாநாயகருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு அவர் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சிலவாவுக்கு தனது வாழ்த்துக்களைதெரிவித்த பின், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்கள். மேலும், இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் இவர்களிடையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.

தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த 5 மாத கை குழந்தை மாயம்!
பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கை!- முழு விபரம்.

Leave a Reply