நோய்வாய்ப்பட்டு நடுகடலில் படகில் தத்தளித்த மீனவரை காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கைக் கடற்படையினர்!

கடந்த மாதம் (ஜனவரி) 3-ம்தேதி, பேருவளை துறைமுகத்திலிருந்து மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற மீனவர் ஒருவருக்கு, காலி களங்கரை விளக்கத்திலிருந்து 172 கடல் மைல் தூரத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுள்ளார்.

இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சத்தில் இருந்து நேற்று  (01.02.2019) வந்த தகவலை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற இலங்கைக் கடற்படையினர், அந்த மீனவரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டுவந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

ஏற்காடு மலைப்பாதையில் விபத்துக்களை தவிர்க்க குவிலென்ஸ்கள் பொருத்த வேண்டும்:  சுற்றுலா பயணிகள் கோரிக்கை.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா!

Leave a Reply