த(க)ண்ணீரில் தத்தளிக்கும் இலங்கை வடக்கு மாகாணம்!

இலங்கையில் தொடர்ந்து பெய்த கனமழைக் காரணமாக, வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் தற்போது இலங்கை கடற்படை அதிகாரிகளும் மற்றும் ஊழியர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உணவு, குடிநீர் மற்றும் மருந்து பொருட்களை கடற்படை ஊழியர்கள் படகு மூலம் விநியோகித்து வருகின்றனர்.

– என்.வசந்தராகவன்.

ஏற்காட்டில் சட்டமன்ற உறுப்பினர் குழு ஆய்வு.
டெல்லியில் முகாமிட்டுள்ள தெலுங்கானா முதலமைச்சர்!

Leave a Reply