இலங்கை அரசியலில் திடீர் திருப்பம்!- மஹிந்த ராஜபக்ஷ, அவரது மகன் நாமல் ராஜபக்ஷ உள்பட 54 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறினார்கள்!

நேற்று முன்தினம் இரவு, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். மேலும், 2019 ஜனவரி 05-ந்தேதி இலங்கை பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறும் என்றும் அரசிதழில் வெளியிட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து இலங்கை மக்கள் மீழ்வதற்குள், இன்று இலங்கை அரசியலில் மற்றொரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆம், எப்போதும் பரபரப்புக்கு சொந்தகாரரான மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவாளர்களுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இன்று இணைந்துள்ளார்.

அவருடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, மஹிந்த யாபா அபேவர்தன, சி.பி.ரத்னாயக, ஜானக பன்டார தென்னகோன், ஜோன்ஷ்டன் பெர்னாந்து. மஹிந்தானந்த அளுத்கமகே, பியங்கர ஜயரத்ன, ரோஹித அபேகுனவர்தன, பிரசன்ன ரனதுங்க, விஜயசேகர, ஜானக வக்குபுர, செஹான் சேமசிங்க, ஹெனுக விதான கமகே, அருந்திக பிரனாந்து, காஞ்சன விஜயசேகர, நிமல் லன்ஷா, இந்நிக அனுருத்த, டி.வி. சானக, அனுர பிரியதர்ஷன இடி.பி. விதானகே, சந்திம வீரக்கொடி, சுசந்த புஞ்சி நிலமே, லக்ஷமன் யாபா, சுமேதா பி. ஜயசேன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, தாரனத் பஸ்னாயக உள்பட 54 பேர், இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்பினர்களாக சேர்ந்து, அதற்கான உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அரசியலில் இன்னும் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply