இந்திய வணிகக் கப்பலில் இருந்த மீனவருக்கு திடீர் மாரடைப்பு!-காப்பாற்றி கரைச்சேர்த்த இலங்கை கடற்படையினர்.

இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சம் அளித்த தகவலின் அடிப்படையில், ஃபவுல் பாயிண்ட் கடற்கரையிலிருந்து 7 கடல் மைல்கள் தொலைவில் “விஸ்வா விஜய்” என்ற இந்திய வணிகக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால், மிகவும் ஆபத்தான நிலையில் மயக்கமடைந்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படையினர், நோயாளியை மீட்டு திருகோணமலை கடற்கரை பகுதிக்கு பத்திரமாக கொண்டு வந்து, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவசர மருத்துவ சிகிச்சைக்காக திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

-என்.வசந்த ராகவன்.

பண மதிப்பிழப்பு என்பது பொருளாதார கொள்கை அல்ல; கவனமாக திட்டமிடப்பட்ட குற்றவியல் நிதி மோசடி!-காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை.
அமைச்சர் ஜெயக்குமாரின் நேர்முக உதவியாளர் கே.ஆர்.லோகநாதன் மற்றும் மகன்கள் கார் விபத்தில் பலி!-தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிச்சாமி இரங்கல்.

Leave a Reply