தண்ணீருக்குள் ஆயுதக் குவியல்! -இலங்கையில் பரபரப்பு.

அறுகம் குடா  (Arugam Bay) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால், அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது. அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது.

அறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான “த லோன்லி பிளானட்” அறிவித்துள்ளது.

அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது.

அறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்சறுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மீனவ மக்களின் தொழிலாகவே உள்ளது.

இப்படி வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலாத் தளமாக திகழும் இப்பகுதியில், தண்ணீருக்குள் இருந்து ஆயுதக் குவியல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அறுகம் குடா (Arugam Bayபகுதிக்கு சென்ற இலங்கை கடற்படையினர், அங்கு தண்ணீருக்குள் பதுக்கி வைத்திருந்த ஆயுதக் குவியலை கண்டு பிடித்தனர். சுமார் 3 மணி நேர கடுமையான முயற்சிக்கு பிறகு, seven (07) 81 mm mortar grenades, two (02) 81 mm mortar grenade fuzes, three (03) 60 mm mortar grenades (with fuze), seventy nine (79) 7.62×39 mm ball ammunition and one (01) RPG grenade spilling charger. ஆகிய சக்தி வாய்ந்து வெடிப்பொருட்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் அங்கு மிகப்பெரிய ஆபத்து தடுக்கப்பட்டது.

இதுகுறித்து பொத்துவில் காவல் துறையினர் புலண் விசாரணை செய்து வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply