கலைஞர் குணமடைய தமிழில் வாழ்த்துக்களை பதிவு செய்த இந்திய குடியரசு தலைவர்!

சென்னை காவேரி மருத்துவமனையில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வரும் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் சென்று பார்த்தார்.

அவரது உடல் நலம் குறித்து, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முன்னாள் முதல்வரும், முதுபெரும் தலைவருமான கலைஞர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.- என்று தமது வாழ்த்துக்களை, இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழில் பதிவு செய்துள்ளார்.

அரசியல் ரீதியாகவும், கொள்கை அடிப்படையிலும் ஆயிரம் கருத்து வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இருந்தாலும், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் எளிமையும், இத்தகைய நாகரீகமான பண்பட்ட நடவடிக்கைகளும், உண்மையிலுமே அவருக்கு பெருமைச் சேர்த்துள்ளது.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply