இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கான ஆணழகன் போட்டி!

இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்களுக்கான ஆணழகன் (பாடி பில்டிங் சாம்பியன்ஷிப்) போட்டி கெமுனுவில் நடைபெற்றது.

இதில், 60 கிலோ எடையுள்ளவர்கள் கலந்து கொண்ட போட்டியில், முன்னணி எழுத்தாளர் பாஸ் பிரசன்னாவும், 65 கிலோ எடையுள்ளவர்கள் கலந்து கொண்ட போட்டியில் முன்னணி பொறியியல் மெக்கானிக் ஹேமசந்திராவும், 70 கிலோ எடையுள்ளவர்கள் கலந்து கொண்ட போட்டியில் முன்னணி தகவல் தொடர்பாளர் டயஸ்சும், 75 கிலோ எடையுள்ளவர்கள் கலந்து கொண்ட போட்டியில் சீமான் சுபாஷ் ஸ்ரீவர்தனாவும் முதலிடத்தை பெற்றனர்.

இவர்கள் அனைவரும் இலங்கை கடற்படை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply