இலங்கையில் புயல் காற்றில் சேதமடைந்த பொதுமக்களின் வீடுகளை சீரமைத்து கொடுக்கும் இலங்கை கடற்படையினர்!

இலங்கையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஜீன் 8, 9 தேதிகளில் வீசிய புயல் மற்றும் சூறாவளி காற்றால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, குருநாகல் மஸ்பொத பிரதேசத்தில் Kudagalgamuwa, Bibiladeniya ஆகிய பகுதிகளில் புயல் காற்றில் மரங்கள் முறிந்து வீடுகளின் மீது விழுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இதனை அறிந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு இரண்டு மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்களை உடனடியாக அனுப்பி வைத்தனர். 

Kudagalgamuwa பிரதேசத்திற்கு ஒரு அதிகாரி உள்பட 41 கடற்படை ஊழியர்களும் மற்றும் Bibiladeniya பிரதேசத்திற்கு ஒரு அதிகாரி உட்பட 25 கடற்படை ஊழியர்களும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

புயல் மற்றும் சூறாவளி காற்றில் பொதுமக்களின் வீடுகளின் மீது முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு, சேதமடைந்த வீடுகளை பழுது பார்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

-என்.வசந்த ராகவன்.

விஸ்வரூபம் இரண்டாம் பாகம் திரை முன்னோட்டம் வெளியீட்டு விழா! -வீடியோ.
திருச்சி அருகே இரண்டு நாட்களுக்கு மேலாக இருளில் மூழ்கிக்கிடக்கும் இரண்டு கிராமங்கள்!-மின் வாரிய அதிகாரிகள் அலட்சியம்.

Leave a Reply