நள்ளிரவில் நடந்த பயங்கரம்! ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் உயிர்பிழைத்த பயணிகள்!-அரசு பேரூந்தின் அவலநிலை.

திருச்சி மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து திருநள்ளார் நோக்கி புறப்பட்ட அரசு பேரூந்து (TN.68 N.0399) ஒன்று, இன்று (27.01.2018) நள்ளிரவு 12.05 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி அப்போல்லோ மருத்துவமனை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேரூந்தின் வலது பக்க முன்சக்கரத்தின் டயர் திடீரென்று வெடித்ததில் பேரூந்து நிலைத்தடுமாறி தேசிய நெடுஞ்சாலையில் அங்குமிங்கும் ஓடியது. பேரூந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினார்கள்.

ஓட்டுநரின் சாமார்த்தியத்தால் பேரூந்து அதிஷ்டவசமாக எந்தவித சேதமுமின்றி நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டது. பேரூந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர்பிழைத்தால் போதுமென்று பேரூந்தில் இருந்து இறங்கினார்கள். பிறகு அந்தவழியாக வந்த வேறொரு பேருந்தை வழிமறித்து ஏறிச்சென்றார்கள்.

அரசு பேரூந்துக்களின் பராமரிப்பும், பாதுகாப்பும் மிகமோசமாக இருக்கிறது. எப்போது என்ன நடக்கும் என்பது ஓட்டுநருக்கு கூட தெரியாது. இந்த லட்சணத்தில் பேரூந்துக் கட்டணம் உயர்வு வேறு!?

அரசு போக்குவரத்து கழகத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேட்டையையும், முறைக்கேட்டையும் முழுமையாக தடுக்காதவரை, அரசு போக்குவரத்து கழகத்தை அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply