கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை; 5 லட்சம் அபராதம்!

Shiv Pal Singh Spl.C.B.I Judge- Ranchi.

Shiv Pal Singh Spl.C.B.I Judge- Ranchi.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் உள்பட 16 பேர் குற்றவாளி என கடந்த மாதம் 23-ந்தேதி ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தீர்ப்பளித்தார்.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

அவர்களுக்கான தண்டனை விவரம் 03.01.2018 அன்று அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், லாலு பிரசாத்தின் ஆதரவாளர்கள், நீதிபதி சிவபால் சிங்க்கு தொலைபேசி வழியாக மிரட்டல் விடுத்ததன் காரணமாக தண்டனை அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது.

lalu prasad

இந்நிலையில் இன்று (06.01.2018) 4 மணிக்கு வீடியோ கான்பிரன்சிங் மூலம் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் 7 பேருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று லாலு மகன் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply