பள்ளி மாணவியை பதுக்கி வைத்து, காவல்துறையினரை அலைய விட்ட ஆசாமி!

ye2011P5

ஏற்காடு பட்டிப்பாடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி  ஒருவர் (அந்த பெண்ணின் எதிர்காலம் கருதி அவரது பெயர் மற்றும் படம் இங்கு வெளியிடவில்லை) ஏற்காட்டில் ஒரு பள்ளியில் விடுதியில் தங்கி 10 ஆம் வகுப்பு படித்துள்ளார். விடுதியின் உணவு பிடிக்க வில்லை எனவும், திருப்பூரில் உள்ள      ஏதேனும் கம்பெனிகளுக்கு வேலைக்கு போவதாகவும், வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு கிளம்பி விட்டார்.

அவர் ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் பஸ்சில் அழுது கொண்டே பயணம் செய்துள்ளார். அப்போது அவர் அருகில் ஏற்காடு முண்டகாம்பாடி பகுதியை சேர்ந்த ராணி என்பவர் பயணம் செய்துள்ளார். நடந்த விஷயங்களை அந்த பெண்ணிடம் விசாரித்து விட்டு, தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, அவரது மருமகன் ராஜேந்திரன் வசம் ஒப்படைத்து, தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

ராஜேந்திரன் தனது மொபைல் போனில், பள்ளி மாணவி  வீட்டிற்கு போன் செய்து, தான் திருப்பூர் பனியன் கம்பெனியில் இருந்து பேசுவதாகவும், தங்கள் பெண் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்துள்ளதாகவும் பொய்யான தகவல் கொடுத்துள்ளார்.

பதறிப்போன பள்ளி மாணவியின் பெற்றோர், ஏற்காடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளனர். காவலர்கள் ராஜேந்திரனுக்கு போன் செய்த போது, திருப்பூர் பஸ் நிலையம் வரும்படியும், பெண்ணை அனுப்புவதாகவும்  கூறியுள்ளார்.

இதை நம்பி ஏற்காடு காவலர்கள் திருப்பூர் சென்று ஏமாந்து வந்துள்ளனர். பின்னர் ராஜேந்திரன் இருப்பிடம் அறிந்து பள்ளி மாணவியை மீட்டுள்ளனர். இதுக்குறித்து ராஜேந்திரனிடம் ஏற்காடு காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

-நவீன் குமார்.