மலை கிராமங்களில் நீர்வடி பகுதி மதிப்பாய்வு முகாம்!

???????????????????????????????திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, ஜமுனாமரத்தூர் ஒன்றியத்தில், ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் கிராமங்களில் ஒருங்கிணைந்த நீர்வடி பகுதி மேலாண்மை திட்ட கிராம மக்கள் பங்கேற்ற மதிப்பாய்வு முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் திலகவதி அன்பழகன் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை திட்ட விரிவாக்க அலுவலர் ஹரக்குமார் முன்னிலை வகித்தார். ரீடு தொண்டு நிறுவன இயக்குநர் வழக்கறிஞர் ப.கி. தனஞ்செயன் வரவேற்று திட்ட நோக்கம் குறித்து விளக்கி பேசினார்.

முகாமில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்மை இணை இயக்குநர் ஜெயச்சந்திரன் கலந்த கொண்டு பேசினார். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-வதாக ஜமுனாமரத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 6 பஞ்சாயத்துக்களை சேர்ந்த 11 ஒருங்கிணைந்த நீர்வடி சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் 5 முதல் 7 ஆண்டுகள் வரை மக்கள் பங்கேற்போடு செயல்பட்டு சாமைகலம் அமைத்தல், நீர்ஆதாரம் பெருக்குதல், தடுப்பணை அமைத்தல், சம உயர வரப்பு அமைத்தல் போன்ற விவசாய மக்கள் வாழ்வாதார மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் இத்திட்டத்திற்கு மாவட்ட முகமையாக மாவட்ட வன அலுவலர் தென்னப்பன் செயல்படுவார்.

இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, திட்ட ஆய்வு அறிக்கை தயாரிப்பு, மக்கள் பங்கேற்பு கூட்டம் ஆகியவற்றை ரீடு தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என கூறினார்.

ரீடு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மணி, பாலாஜி, குமரேசன், மன்னன், செல்வராணி, அமுதா ஆகியோர் வெண்; வரைபடம், பருவகால வரைபடம், இயற்கை வள வரைபடம், சமூக வரைபடம் போன்றவற்றை விளக்கினர். கிருஷ்ணாலயா கலை குழு இயக்குநர் முருகையன் தலைமையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ரீடு ஒருங்கிணைப்பாளர் இமயவர்மன் நன்றி கூறினார்.

விழாவில் வேளாண்மைத்துறை பொறியாளர் ராஜசேகர், சமூகவியலர் சாமிநாதன் மற்றும் விவசாயிகள் கலந்த கொண்டனர்.

– செங்கம். மா.சரவணக்குமார்.