சர்வதேச தரகர் சுப்பிரமணியன் சுவாமியை, தேச துரோகத் தடை சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும்!

இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுடன்,சுப்பிரமணியன் சுவாமி (நாள் :ஜீலை22,2014)

இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுடன்,சுப்பிரமணியன் சுவாமி (நாள் :ஜீலை22,2014)

நம் நாட்டின் இரகசியங்களை அன்னிய நாடுகளிடம் விற்று பிழைப்பு நடத்தி வரும் சர்வதேச தரகர் அன்னிய கை கூலி, அரசியல் கோமாளி, தமிழர்களை காட்டி கொடுத்து, தமிழர்களின் உரிமைகளை அடமானம் வைத்து, சிங்கள வெறியன் ராஜபட்சேவின் கால்களை நக்கி பிழைக்கும் சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்திற்குள் நுழைவதற்கு தமிழக அரசு உடனடியாக தடைவிதிக்க வேண்டும்.

சர்வதேசப் புரோக்கர் சுப்ரமணியசுவாமியுடன், டக்ளஸ் தேவானந்தா.

சர்வதேசப் புரோக்கர் சுப்ரமணியசுவாமியுடன், டக்ளஸ் தேவானந்தா.

இவர் தமிழகத்தில் நடமாடினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். பொது அமைதிக்கு பங்கம் உண்டாகும், தமிழக மக்களின் நிம்மதிக்கு பாதிப்பு ஏற்படும்.

மக்கள் வரி பணத்தில் இவருக்கு வழங்கப்பட்டு வரும் அதிஉயர் பாதுகாப்பை உடனடியாக மத்திய அரசு திரும்பபெற வேண்டும். இந்திய நாட்டின் இறையாண்மைக்கும், பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமியை தேச துரோகத் தடை சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவர் உலக நாடுகள் அனைத்திற்கும் உல்லாசமாக சென்று வருவதற்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இவருடைய வருமானம் என்ன? உலக நாடுகளில் இவருக்கு இருக்கும் இரகசிய தொடர்புகள் என்ன, என்ன? போன்ற விவரங்களை தேச நலன் கருதி உடனடியாக புலன் விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் மத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போவது உறுதி என்பதை முன்கூட்டியே அறிந்து, இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவின் ஆலோசனைப்படி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது லெட்டர் பேடு கட்சியான ‘ஜனதா’ கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்து கொண்ட சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவின் ஒட்டு மொத்த அதிகாரமும் தற்போது தன் கையில்தான் இருக்கிறது என்பதாக நினைத்துக் கொண்டு இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சேவிற்கு ஆதரவாகவும், இந்தியாவின் இறையாண்மைக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

தனது சொந்த விருப்பங்களை இந்திய அரசின் வாக்குறுதிகளாகவும், இந்திய அரசின் வெளியுறவு கொள்கை முடிவுகளாகவும், இந்தியாவிலும், இலங்கை மண்ணில் அறிவித்து வருகிறார்.

மேலும், தமிழக மக்களுக்கும், மீனவர்களுக்கும் விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை அவமானப்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார்.

தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2 அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Subramanian-Swamyஇந்த அவதூறு வழக்கில் ஜெ.ஜெயலலிதாவை முதல் சாட்சியாக குறுக்கு விசாரணை செய்வேன் என்று தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி 08.09.2014 அன்று தெரிவித்து இருந்தார்.

தமிழினப் படுகொலையில் ஈடுப்பட்ட இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும். இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும், தமிழினப் படுகொலை போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும். தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடமும், உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தமிழக அரசு சட்டமன்றத்தில் தனி தீர்மானம் நிறைவேற்றி, ஆட்சியை பற்றியெல்லாம் கவலைப்படாமல், எந்தவித அரசியல் சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் மிகத் துணிச்சலாக அதற்காக தொடர்ந்து போராடியும் வருகிறார்.

இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் மதிப்புமிக்க தலைவராகவும் ஜெ.ஜெயலலிதா திகழ்ந்து வருகிறார்.

இதை பொறுத்துக் கொள்ள முடியாத இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது சகாக்களும், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் புகழுக்கும், அவரது தலைமையிலான ஆட்சிக்கும் எப்படியாவது களங்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.

அதற்காக சுப்ரமணியன் சுவாமி போன்ற சர்வதேச தரகர்களை தூண்டி விட்டு, தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.

இதனால் சிங்கள வெறிப்பிடித்த அமைப்புகளையும், தனது ஆதரவாளர்களையும் தூண்டிவிட்டு கடந்த ஜீன் மாதம் 10-ந்தேதி கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்துக்கு முன்பு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உருவ பொம்மைகளை திட்டமிட்டு தீயிட்டு கொளுத்தினார்கள்.
அதை இலங்கை இராணுவமும், போலிசும் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுதான் நின்றதே தவிர, தீயை அணைப்பதற்கோ, ஆர்பாட்டக்காரர்களை கலைப்பதற்கோ எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இவை அனைத்தும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவும், அவரது தம்பியும், இலங்கையின் பாதுகாப்பு செயலாளருமான கோத்தபய ராஜபக்ச ஆகியோரின் உத்தரவின் பேரில்தான் நடைப்பெற்றுள்ளது.

அதன் பிறகு கடந்த ஜீலை மாதம் 9-ந்தேதி இலங்கையின் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களை பற்றி அவதூறாகவும், தரக் குறைவாகவும், இலங்கை பாராளுமன்றத்தில் பேசியுள்ளார். அஸ்வரின் கண்ணியமற்ற பேச்சை, இலங்கையின் பிரதமர் திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன ரசித்தாரை தவிர, அவரது பேச்சை கண்டிக்கவில்லை.

அதன் பிறகு தான் இலங்கை அரசின் பாதுகாப்பு துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதங்கள் எழுதுவது குறித்து, ஆட்சேபகரமான புகைப்படத்துடன் அவதூறான கருத்துகள் வெளியாகின.

இதனால் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இலங்கை அரசின் இந்த விஷமத்தனமான நடவடிக்கையை அனைத்து கட்சித் தலைவர்களும் கண்டித்தனர். இலங்கை அரசுடனான உறவை, மத்திய அரசு துண்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்தினார்கள்.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை கிளப்பப்பட்டது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் கொதித்தெழுந்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

இதற்கிடையே, இலங்கை அரசின் செயல்பாடு குறித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 01.08.2014 ஒரு கடிதம் எழுதினார்.

அதில், இலங்கை தூதரை நேரில் அழைத்து இந்தியாவின் அதிருப்தியை தெரிவிக்க வேண்டும் என்றும், மேலும், இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும்படி வலியுறுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் இறங்கியது. அதன்பேரில் கொழும்பில் உள்ள இந்திய தூதரகம், இந்த பிரச்சினையை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்றது. இதனால் ராஜபக்சே அரசு பணிந்தது. அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை இணையதளத்தில் இருந்து உடனடியாக நீக்கியது. அதுமட்டுமின்றி நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்டுக்கொண்டது.

இதுவரை சர்வதேச அளவில் ஐ.நா.சபையிடம் கூட, மண்டியிடாத இலங்கை அரசாங்கம், முதன், முதலாக தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவிடம் மண்டியிட்டு பகிரங்க மன்னிப்பு கேட்டது. இது ஒற்றுமையாக குரல் கொடுத்த ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மகத்தான வெற்றி!

இந்நிலையில் நான் சொன்னதால்தான் அந்த சர்ச்சைக்குரிய கட்டுரையை இலங்கை அரசாங்கம் இணையதளத்தில் இருந்து நீக்கியது என்றும், நான் தான் இலங்கை அரசாங்கத்தை மன்னிப்பு கேட்க சொன்னேன் என்றும், அப்போது இலங்கையில் இருந்த சர்வதேச தரகர் சுப்ரமணியன் சுவாமி கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் கூறினார்.

மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை இராணுவ கருத்தரங்கில் கலந்து கொண்ட சுப்ரமணியன் சுவாமி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை ஜெயலலிதா தீர்மானிக்க முடியாது என்று இலங்கையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த வாரம் ‘தந்தி ‘தொலைக்காட்சியில் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று நான் தான் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் சொன்னேன் என்று, சுப்ரமணியன் சுவாமி பகிரங்கமாக தெரிவித்ததார்.

இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டது. சுப்ரமணியன் சுவாமியை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மீனவர்களும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் இதுக்குறித்து தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதமாக பிரதமர் நரேந்திர மோதிக்கு சுப்பிரமணியன் சுவாமி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் அந்தப் படகுகள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கடந்த 4-ஆம் தேதி பேட்டி அளித்த சுப்பிரமணிய சுவாமி, மீனவர்கள் பிரச்னையில் பிரதமர் மோதிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து கடிதங்கள் எழுதி வருகிறார் என்றும், இதனால் எந்த பயனும் ஏற்படபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இதேபோன்று முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் முதல்வர் ஜெயலலிதா இவ்வாறு நடந்து கொள்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சுவாமி மீது அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 2 அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனாலும், சுப்பிரமணியன் சுவாமி தொல்லை ஓய்தபாடில்லை. எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தோடு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றார். sswamy.jpg twitter.bmp1

sswamy.jpg twitter

ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தீவிரவாதிகளுக்கு நண்பனாக இருக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது என்றும், டாஸ்மாக்கை மூடினால் சசிகலா பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவார் என்றும் தனது ‘டிவிட்டர்’ பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி 11.09.2014 அன்று தெரிவித்துள்ளார்.

திலீபன் நினைவு நாளை தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுவது இன்று, நேற்று அல்ல. அது நீண்ட காலமாக நடந்து வருகிறது. இப்போது திடீரென்று இதுபோன்று கூற வேண்டிய அவசியம் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஏன் ஏற்படுகிறது என்றால், கச்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தம், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை, ராஜபக்சே போர்க்குற்றவாளி, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடைவிதிக்க வேண்டும். தனி ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடமும், உலகம் முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், அவரது தலைமையிலான ஆட்சிக்கும் நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்று இவ்வாறு கூறியிருக்கிறார். இது சுப்பிரமணியன் சுவாமியின் திட்டமிட்ட சதிசெயல்.

அடுத்து டாஸ்மாக்கை பற்றி சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.

இந்தியா முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நீண்ட நாளைய கனவு, இதை பலமுறை தமிழக சட்டமன்றத்திலேயே பதிவு செய்து இருக்கிறார்.

உண்மையிலுமே சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்திய மக்கள் மீது அக்கறை இருக்குமானால் பிரதமர் நரேந்திர மோதியிடம் சொல்லி, இந்தியா முழுவதும் பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு பாராளுமன்றதில் சட்டம் இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும்! அதற்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தனது பரிப்பூரண ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் நிச்சயம் வழங்குவார்.

அதுவரை தமிழகத்திற்குள் நுழைவதையும், ‘வானத்தை வில்லாக வளைப்பேன்; மணலை கயிறாக திரிப்பேன்’ என்று வாய் சவடால் பேசுவதையும் சுப்பிரமணியன் சுவாமி நிறுத்தி கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கும் நல்லது, இந்த நாட்டிற்கும் நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in