கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூர வளைகாப்பு விழா!

அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி அம்மன்

அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி அம்மன்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீசெண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீபூவனநாதவாமி திருகோவிலில் செண்பகவல்லி அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா 30.07.2014 அன்று நடைபெற்றது.

செண்பகவல்லி அம்மன் கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைபெற்றது.

மாலை 4 மணியளவில் சுவாமி, அம்பாளுக்கு ஆடிப்பூர அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பட்டு உடுத்தி, திரளான பக்தர்கள் கொடுத்த வளையல்கள், மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, அம்பாளுக்கு பாசிப்பயறு கட்டி, கர்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும்,வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருக்கோவில் செயல் அலுவலர் சு.கசன்காத்த பெருமாள், தக்கார் மற்றும் உதவி ஆணையர் செல்லத்துரை சிறப்பாக செய்திருந்தனர்.

அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்

அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன்

அதே போல், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா 30.07.2104 அன்று நடைபெற்றது. காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபராதனை நடைபெற்றது. மாலை 6 மணியளவில் அம்பாளுக்கு ஆடிப்பூர அபிஷேகம் நடைபெற்றது.

அம்மனுக்கு பட்டு உடுத்தி, வளையல்கள், மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, அம்பாளுக்கு பாசிப்பயறு கட்டி, கர்ப்பிணி கோலத்தில் சிறப்பு தரிசனமும்,வளைகாப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

-கோ.சரவணக்குமார்.