ஏற்காடு பஸ்நிலையத்தில் ஏற்காடு அரசு சித்த மருத்துவமனை சார்பில், பொதுமக்களுக்கு டெங்கு காய்சலை எதிர்க்க, நிலவேம்பு சாறு, பப்பாளி இலைசாறு, உள்ளிட்டவைகளை தொடர்ந்து அருந்தி வரவேண்டும் என விழிப்புணர்வு நோட்டிஸ் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.
சித்த மருத்துவர் டாக்டர்.பால முருகன் நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனதூள், பேய்புடல், கோரை கிழங்கு, சுக்கு, மிளகு, பற்பாடகள் உள்ளிட்டவைகள் அடங்கிய நிலவேம்பு கசாயத்தை பொது மக்களுக்கு வழங்கினார்.
மேலும், அரசு சித்த மருத்துவமனையில் தினசரி நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்படுவதாக கூறினார்.
இதுபோன்று வாழவந்தி சித்த மருத்துவர் குமார், நாகலூர் சித்த மருத்துவர் ராஜேந்திரன் ஏற்காட்டின் பல பகுதிகளில் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர்.
-நவீன் குமார்.
