குஜராத்திலிருந்து ஓமன், இதர வளைகுடா நாடுகளை இணைக்கும் வகையில், மத்திய கிழக்கு – இந்திய ஆழ்கடல் குழாய் வழி எரிசக்தித் திட்டம் குறித்து தீவிரமான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக ஊடகங்களில் வெளியான செய்திக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது போன்ற பரிந்துரைகள் தற்போது ஏதும் பரிசீலனையில் இல்லை என்று அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இத்திட்டம் தொடர்பாக ஓமன் அல்லது இதர வளைகுடா நாடுகளுடன் எந்த நிலையிலும், தீவிரமான விவாதங்களோ அல்லது பேச்சுக்களோ நடைபெறவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து யூகங்களுக்கும் மறுப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திவாஹர்
