டெல்லி சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட கிரண் பேடி தோல்வியடைந்துள்ளார்.
மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கைப்பற்றும் என்று தெரிகிறது. பாரதிய ஜனதாவுக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் எஸ்.கே. பாக்காவிடம் 2,277 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
