ஏற்காடு மலைப்பாதையில் உரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது !  

ye0502P1

சேலத்தில் இருந்து உரம் ஏற்றிக்கொண்டு ஏற்காடு, கரடியூர் கிராமத்தை சேர்ந்த, ராஜ் என்பவருக்கு சொந்தமான டெம்போ லாரியில், அதே கிராமத்தை சேர்ந்த அசோக் என்பவர், ஏற்காடு நோக்கி அதிகாலை நேரத்தில் ஓட்டி வந்துள்ளார்.

ஏற்காடு மலைப்பாதையின் 17 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே லாரி வந்துக் கொண்டிருந்தபோது, சாலை ஓரம் இருந்த தடுப்பு சுவறில் மோதி, சுவற்றை தாண்டி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் தப்பித்து தலைமறைவாகி விட்டார். லாரியில் ஏற்றி வந்த உரம் அனைத்தும் மலை பள்ளத்தில் கொட்டி வீணானது.

இது குறித்து ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள டிரைவர் அசோக் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

      -நவீன் குமார்.