ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக விளம்பரம் வெளியிட்டு, அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களை கட்டணமாக வசூலித்து, மக்களின் உயிரோடு விளையாடி வரும் ஊடக நிறுவனங்கள், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து; விரக்தியில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நபர்களின் மரணத்தையும் செய்தியாக வெளியிட்டு பிழைப்பு நடத்தி வருகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது உண்மையிலுமே நெஞ்சம் பதைக்கிறது.
பணத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எத்தகைய மா பாதகத்தையும் செய்வதற்கு இத்தகைய ஊடகங்கள் துணிந்து விட்ட பிறகு, இவர்களிடம் உண்மையையும், நேர்மையையும், நடுநிலையையும் மற்றும் கண்ணியத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும்?!
இது இவர்களுக்கு முதல்முறை அல்ல; பணத்திற்காக இதுபோன்ற மா பாதகங்களை இந்த ஊடக நிறுவனங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. பெட்டி பெட்டியாக யார் பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக் கொண்டு; இதழியல் தர்மத்தையே ஏலம் விட்டு விட்டு; எதை வேண்டுமானாலும் தலைப்புச் செய்தியாக வெளியிடும் இத்தகைய ஊடக நிறுவனங்களை பார்க்கும்போது எட்டையபுரத்து கவிஞன் பாரதி சொன்ன கீழ்காணும் கவிதை வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான்; ஐயோ என்று போவான்!
இதுபோன்ற ஊடக நிறுவனங்களால் தான் ஊடகத் துறைக்கே பெருத்த களங்கம் ஏற்பட்டு வருகிறது.
இதுபோன்ற ந(அ)ச்சு ஊடகங்களை மக்களும், அரசாங்கமும் அடியோடு புறக்கணிக்க வேண்டும்.
இல்லையென்றால், இது போன்ற அவலங்களும், அநியாயங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்!
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை “கிளிக்” செய்யவும்.
http://www.ullatchithagaval.com/2021/04/05/55614/
