விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்!- ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன்! -உச்சநீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

HON’BLE DR. JUSTICE D.Y. CHANDRACHUD.

HON’BLE MS. JUSTICE INDIRA BANERJEE.

ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி.

24646_2020_33_2_24738_Order_11-Nov-2020

கட்டிடக் கலைஞர் மற்றும் அவரது தாயார் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக மும்பையில் கைது செய்யப்பட்ட ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் முகமது ஷேக் மற்றும் நீதிஷ் சர்தா ஆகியோரின் ஜாமீன் மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் இடைக்கால ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (11.11.2020) விசாரணைக்கு வந்தது. இதை அவசர வழக்காக ஏற்று இன்று விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ‘விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்; சாட்சிகளை மிரட்டக்கூடாது; ஒவ்வொருவரும் தனித்தனியாக ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்த வேண்டும் ‘ என்ற நிபந்தனையோடு, ‘ரிபப்ளிக் டிவி’ உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் முகமது ஷேக் மற்றும் நீதிஷ் சர்தா ஆகிய மூன்று பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

இது சம்மந்தமான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும். https://www.ullatchithagaval.com/2020/11/04/51445/

Leave a Reply