ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டர், மகளிர் கூட்டமைப்பினருக்கு மானிய விலையில் டிராக்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே. சி . கருப்பணன், பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஈஸ்வரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.
