பிரபாகரன் ஓர் பயங்கரவாத தலைவர், எனினும் அவருக்கு எதிராக போராடிய இராணுவத்தினரின் குடும்பத்தை அவர் தாக்கவில்லை. ஆனால், மஹிந்த ராஜபக்ஸ என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். எனது பிள்ளைகளை பழி வாங்கினார்: சரத் பொன்சேகா தகவல்.

சரத் பொன்சேகா.

சரத் பொன்சேகா.

எனது ஆரம்பம் மஹிந்த ராஜபக்ஸவினால் உருவாகவில்லை. 35 வருடங்கள் நான் அவரின் ஆசீர்வாதத்துடன் இராணுவத்தில் செயற்படவில்லை. இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி நான் அங்கு சேவையாற்றினேன். அவர் தவறிழைக்கும் போது அவருக்கு எதிராக பேச எனக்கு முதுகெலும்பு இருந்தது.

மறுபுறம் பிரபாகரன் என்பவர் ஓர் பயங்கரவாத தலைவர். அவருடைய அரசியல் கொள்கையின்படி அவர் நாட்டை பிளவுபடுத்த முயற்சி செய்தார். எனினும், அவருக்கு எதிராக போராடியஇராணுவத்தினரின் குடும்பத்தை தாக்கும் வகையில் அவர் செயற்படவில்லை.

எனினும், நான் ஜனநாயக ரீதியில் தேர்தலில் போட்டியிட்டமையினால் மஹிந்த ராஜபக்ஸ பொய்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து என்னைத் தாக்கி சிறையில் அடைத்தார். அதுமட்டுமன்றி எனது பிள்ளைகளை பழி வாங்கினார்.

எனவே, அவ்வாறு செயற்பட்டவர் உறுதியாக பிரபாகரனைவிட மோசமானவர் என்பதனை நான் எந்த இடத்திலும் கூறுவேன். இவ்வாறு சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

-வினித்.