மேலாபவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்துள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்துக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி.

TN.CM JJ

Draft D


உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத்துக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது–

உத்தரகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்.

உத்தரகண்ட் முதலமைச்சர் ஹரீஷ் ராவத்.

ஹரித்துவாரில் தமிழ் ஞானி புலவர் திருவள்ளுவர் சிலை நிறுவுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையையும், தமிழ்நாட்டில் உருவான அமைதின்மையையும் நீங்கள் அறிந்ததே. இப்பிரச்சினை குறித்து பிரதமருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன்.

உணர்ச்சிகரமான இப்பிரச்சினையில் தமிழக மக்களின் உணர்வுகளின் வெளிப்பாட்டை அறிந்து இப்பிரச்சினையை உடனடியாக நல்ல தீர்வை எடுத்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். ஹரித்துவாரில் உள்ள மேலாபவன் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

காலம் தாழ்த்தாமல் நல்ல நடவடிக்கை மேற்கொண்ட தங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன்.

இவ்வாறு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com