பெல்ஜிய கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் டாங்குய் போட்மேன் இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம்!

பெல்ஜிய கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் டாங்குய் போட்மேன் அவர்கள், இந்தியா – பெல்ஜியம் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தவும் 2026 நவம்பர் 14ஆம் தேதி இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு வருகை தந்த அவர், தேசிய போர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து நாட்டிற்காக உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, தெற்கு பிளாக்கில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்தப் பயணத்தின்போது, இந்தியக் கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் கடல்சார் பாதுகாப்பு, கடற்படை செயல்பாடுகள், பயிற்சிகள், இரு நாட்டு கடற்படை வீரர்களின் பரிமாற்றம் மற்றும் கடற்படை தொழில்நுட்ப ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

மேலும், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் குறித்து இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடினார்.

இந்தியா மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு இடையே நீண்டகாலமாகக் கடல்சார் உறவுகள் நிலவி வருகின்றன. இந்த அதிகாரப்பூர்வப் பயணம் இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான உறவில் முக்கிய மைல்கல்லாக அமைவதுடன், ஏற்கனவே உள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply