பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தீபங்களின் திருவிழா நாடு முழுவதையும் ஒளிரச் செய்து, இருளை வெல்லும் உறுதியைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கூறியுள்ளார். இத்திருவிழாவும், வரவிருக்கும் காலங்களும் அனைவருக்கும் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
தாம் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவதாகவும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் நாட்டின் துணிச்சல் மிக்க பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் பாரம்பரியத்தைத் தொடரப்போவதாகவும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ள பிரதமர், தீபாவளி வாழ்த்து தொடர்பான தமது காணொலிப் பதிவையும் பகிர்ந்துள்ளார்.
திவாஹர்
