தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்திற்கு எவ்வித சட்டபூர்வமான அல்லது நிர்வாக ரீதியான அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கே.பி.சுகுமார்
