குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் நடைபெற்ற பாரத் பர்வ் விழாவில், மத்திய குடிசைத் தொழில்கள் கழக அரங்கத்தை பிரதமர் பார்வையிட்டார்

குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற்று வரும் பாரத் பர்வ் விழாவில், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனமான, மத்திய குடிசைத் தொழில்கள் கழகம் (சிசிஐசி) பங்கேற்றுள்ளது.

2026 அக்டோபர் 30 அன்று, இவ்விழாவில் அமைந்துள்ள சிசிஐசி அரங்கத்தை, பிரதமர் பார்வையிட்டது, அந்த நிறுவனத்திற்குக் கிடைத்த ஒரு பெருமைமிக்க, என்றென்றும் நினைவில்கொள்ளத்தக்க தருணமாகும்.

பிரதமரின் வருகை, வளமான பாரம்பரியத்தையும், கைவினைஞர்கள்,  நெசவாளர்களுடனான தனது நீண்டகாலத் தொடர்பையும், நாட்டின்  பாரம்பரிய கைத்தறி, கைவினைப் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான  தொடர் முயற்சிகளையும் வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கியது.

சிசிஐசி அரங்கம், கைவினைஞர்கள், நெசவாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புகளையும், நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் வழங்குவதுடன், அவர்களது மேம்பாட்டிற்கான கழகத்தின் நடவடிக்கைகளையும் எடுத்துரைக்கிறது. இது போன்ற நிகழ்வுகள், சிசிஐசி இந்தியா நிறுவனத்தின் பாரம்பரிய கைவினைத்திறனை, உள்நாட்டு,  சர்வதேச சந்தைகளுடன் இணைத்து, “உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவு அளிப்போம்” என்ற தொலைநோக்குப் பார்வைக்கும், “உள்ளூர் தயாரிப்புகளை உலகளவில் கொண்டு செல்வோம்” என்ற நோக்கத்திற்கும் பங்களித்து வருகிறது.

Leave a Reply