போதைப்பொருள் தடுப்பு அமைப்பான என்சிபி, ‘ஆபரேஷன் டிரைடென்ட்’ என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், அசாம், மிசோரம், மணிப்பூர் முழுவதும் ஒரே நேரத்தில் 38 இடங்களில் 38 குழுக்கள் அதிரடி சோதனை நடத்தின.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், போதைப்பொருளுக்கு எதிரான அரசின் கடுமையான நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று கூறியுள்ளார். அக்டோபர் 23 அன்று, அசாம், மிசோரம், மணிப்பூரில் உள்ள 38 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு அமைப்பு ஒரே நேரத்தில் தொடர் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கி, ஒரு சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையில் ₹100 கோடி மதிப்புள்ள ஹவாலா பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டதாகவும், 1,424 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், ₹17.82 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறியுள்ளார்.
2029 டிசம்பர் 31-க்குள் ஒவ்வொரு போதைப்பொருள் கட்டமைப்பையும் முழுமையாக ஒழிக்கும் இலக்கை அடைவதில் இந்தியாவின் தீர்மானத்திற்கு இந்த நடவடிக்கை சான்றாக விளங்குகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைப்புகள், மூன்று மாநிலங்களின் காவல் படைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் ஒழிப்பு குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள் என திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.
திவாஹர்
