காரில் குட்கா கடத்திய ராஜஸ்தான் கும்பலை பிடிக்க துணிச்சலாகச் செயல்பட்ட தலைமைக் காவலரை நேரில் அழைத்துப் பாராட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்! -முழு விவரம்.

பிடிபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த கடத்தல்காரர்கள்.

கோயம்புத்தூர் மாவட்டம், கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமைக் காவலராகப் பணியாற்றிவரும் வேல்முருகன், விளாங்குறிச்சி பகுதியில் சக காவல்துறையினருடன் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கர்நாடக மாநில பதிவு எண் KA05NG7692 கொண்ட காரை சோதனைக்காகத் தடுத்து நிறுத்த முயன்ற போது, காரை நிறுத்துவதைப் போல போக்கு காட்டி விட்டு, வாகனச் சோதனைச் செய்வதற்கு முன்பாகவே தப்பிச் செல்ல முயன்ற அந்த கும்பலை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் அந்தக் காரின் மேற்கூரை மீது பாய்ந்து படுத்தபடியே 40 கி.மீ தொலைவுக்கு உயிரைப் பணையம் வைத்து அந்த ராஜஸ்தான் கடத்தல் கும்பலை பிடிப்பதற்கு காரணமாக இருந்த தலைமைக் காவலர் வேல்முருகன் (பணி எண்: 456) அவர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.9.2026) தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து, அவரது துணிச்சலைப் பாராட்டினார். அப்போது தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் உடன் இருந்தார்.

Leave a Reply