கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பயன்பாட்டிற்கு பிறகு தடுப்பு மருந்தாக அஸ்வகந்தா பயன்படுத்தியவர்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, அனைத்திந்திய ஆயுர்வேத நிறுவனம், தேசிய ஆய்வுவேத நிறுவனம் சார்பில் 1200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவிஷீல்டு 2-வது தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 முதல் 70 வரையிலான வயதுடையவர்களிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களுக்கு அஸ்வகந்தாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் 28 வாரங்கள் கொடுக்கப்பட்டு, பின்னர் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை செய்யப்பட்ட யாருக்கும் கல்லீரல் அல்லது சிறுநீரக பாதிப்பு எதுவும் இல்லை என்றும், அதற்கான ஆதாரம் இல்லை எனவும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா, இந்தப் பரிசோதனையின் மூலம் ஆயுர்வேத மருந்துகளின் தரம், பாதுகாப்பு ஆகியவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதுபோன்ற ஆய்வுகளால், சர்வதேச அளவில், ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்பாடு, நம்பகத்தன்மை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
கொரோனா தடுப்பூசியின் செயல்பாடுகளை அஸ்வகந்தா மருந்து எவ்வித்திலும் தடுக்கவில்லை என்றும், அஸ்வகந்தா வேரில் இருந்து தயாரிக்கப்பட்ட மருந்துகள் இயற்கையான முறையில் உடலுக்கு நன்மையை வழங்குகின்றன என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
திவாஹர்
