மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக, மும்மதங்களையும் சேர்ந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை இன்று (செப்., 28) மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் முறைப்படி தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட தொடக்க விழாவுக்காக மதுரை வந்த முதல்வர் விஜய், விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சாலை வழியாகச் சென்றார். வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது அப்போது, மீனாட்சி அம்மன் வேடமணிந்து நின்ற பெண் குழந்தையை கையில் தூக்கி வாஞ்சையுடன் வாழ்த்தினார் முதல்வர் விஜய்.
கே.பி.சுகுமார்
