பிரதமர் பெற்ற நினைவுப் பொருட்கள் மின்னணு ஏலம் மகாராஷ்டிராவின் வரலாற்றுப் பாரம்பரியம் மிளிரும் கலைச் சின்னங்கள் இடம் பெறுகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வளமான வரலாற்றுப் பாரம்பரியம், ஆன்மீக மரபுகள், பூர்வீகக் கலை வடிவங்கள், சமகால சாதனைகள் ஆகியவை பிரதமருக்கு வழங்கப்பட்ட நினைவுப் பொருட்களுக்கான மின்னணு ஏலத்தில் பிரதிபலிக்கின்றன.

இம்மாநிலத்தின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரப் பின்னணியை வெளிப்படுத்தும் வகையில், சிற்பங்கள், ஓவியங்கள், கலைப் படைப்புகள், நினைவுச் சின்னங்கள், விளையாட்டுத் துறை சார்ந்த நினைவுப் பொருட்கள் எனப் பல்வேறு வகையான பொருட்கள் இந்த ஏலத்தில் இடம் பெற்றுள்ளன.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் நீடித்த பாரம்பரியத்தை சித்தரிக்கும் பொருட்கள், மராட்டிய மன்னரை வெவ்வேறு வடிவங்களிலும், கலைப் பாணிகளிலும் சித்தரிக்கும் பல வகையான நினைவுப் பொருட்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன.

குதிரை மீது அமர்ந்திருப்பது, சிம்மாசனத்தில் வீற்றிருப்பது, சிங்கத்துடன் இருப்பது, அரச விழாக்களில் இருப்பது போன்ற தோற்றங்களில் உள்ள சிலைகள் இதில் அடங்கும்.

மேலும், ராய்காட் கோட்டையில் உள்ள மேகதாம்பரியின் மாதிரி வடிவம், வெள்ளிச் சிலை, மரச்சிற்ப ஓவியம் உள்ளிட்ட கலைப் படைப்புகள் ஆகியவையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

Leave a Reply