தமிழக அரசு பாலியல் சம்பந்தப்பட்ட வழக்கில் யாராக இருந்தாலும் உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு நியாயத்தை நிலைநாட்ட வேண்டும்.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி சம்பந்தப்பட்ட வழக்கு பாலியல் சம்பந்தப்பட்டது.
குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் உட்பட பெண்களுக்கு எதிரான இந்த வழக்கில் எவரும் தப்பித்துவிடக்கூடாது.
காரணம் மிகவும் கொடுமையான பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்படுவர்களுக்கு நியாயம் கிடைக்கவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து வருங்கால சமுதாயம் பாதுகாக்கப்படவும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
எனவே இந்த பாலியல் தொடர்பான பிரச்சனையில் உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு பாலியல் பிரச்சனைக்கு காரணமாக செயல்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டுவந்து, உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும்.
மேலும் தமிழக அரசு ஜெம் கிரானைட்ஸ் – வீரமணி சம்பந்தப்பட்ட பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனையைப் பெற்றுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கே.பி.சுகுமார்
