குஜராத் மாநிலம் புஜ் ரயில் நிலையத்திலிருந்து பீகார் மாநிலம் பரௌனி வரை வாரம் மூன்று முறை இயக்கப்படும் புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவையை அறிமுகப்படுத்த ரயில்வேத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய ரயில் சேவை 2,532 கிலோ மீட்டர் தொலைவிற்கு இயக்கப்பட உள்ளது. இது குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய நான்கு மாநிலங்களில உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும்.
இந்த ரயில், புஜ் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4:05 மணிக்கு பரௌனி சென்றடையும். மறுமார்க்கத்தில் பரௌனி ரயில் நிலையத்திலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 1:15 மணிக்கு புஜ் சென்றடையும்.
இந்த அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை திங்கள், புதன், சனிக்கிழமைகளில் புஜ் ரயில் நிலையத்திலிருந்தும், மறுமார்க்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பரௌனி ரயில் நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
