சிறுமிகளைச் சீரழித்த ஆர். வீரமணி! சிக்கும் முக்கிய அரசியல் புள்ளிகள்! வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT)! – அவசியம் ஏற்பட்டால் சர்வதேச போலீசின் உதவியையும் நாடலாம்.

மகேஷ் குமார் அகர்வால், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP)

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்.வீரமணி.

போக்சோ (POCSO) சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்.வீரமணி வழக்கை விரிவாகவும், விரைவாகவும் விசாரிப்பதற்காக நான்கு பெண் உயர் காவல் அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைகள் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அமல்ராஜ், சென்னை காவல் ஆணையர்.

இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் விவரம்:

• பி.சி. தேன்மொழி (கூடுதல் காவல் ஆணையர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை)

• திஷா மிட்டல் (இணை ஆணையர், சட்டம் ஒழுங்கு, சென்னை)

• முத்தரசி (காவல் கண்காணிப்பாளர் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்)

• கீதாஞ்சலி (துணை ஆணையர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு)

வழக்கின் பின்னணி விவரம்:

மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அதாவது 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் (Pen drive) போலீசாரிடம் அளிக்கப்பட்டது. ஆனால், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி பிப்ரவரி 2026-ல் காவல்துறையினர் இந்த வழக்கை முடிக்க (Closure report) முயன்றனர். காவல்துறையின் இந்த விபரீத முடிவை ஏற்க மறுத்த சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி.பத்மா சண்முகசுந்தரம் அவர்கள், வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்ற நீதிபதி திருமதி.பத்மா சண்முகசுந்தரம்.

இதனையடுத்து ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கண்டறியப்பட்டு நீதிபதி முன்பு வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆர். வீரமணி மற்றும் வீரமணிக்கு தரகு வேலைப் பார்த்த தம்பதி, வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

வீரமணிக்கு தரகு வேலைப் பார்த்த தம்பதி சாந்தி, மகேந்திர சிம்கன்

.இந்த வழக்கை ஆரம்பத்தில் முறையாக விசாரிக்காமல் அன்றைய ஆட்சியாளர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவும், தனிப்பட்ட ஆதாயத்திற்காகவும் இந்த வழக்கை மூடி மறைக்க முயன்ற உயர் காவல் அதிகாரிகள் முதல் விசாரணை அதிகாரி வரை அனைவர் மீதும் தற்போது ச.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கைது செய்யப்பட்ட வீரமணி மற்றும் அவரது தரகர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் காவல்துறைக்கு கிடைத்துள்ளது. இந்த வழக்கில் பல அரசியல் கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அளவுக்கு அதிகமான பணமும், அதன் மூலம் கிடைத்த அதிகார திமிரும் தான் ஆர். வீரமணியின் இத்தனை குற்றங்களுக்கும் அடிப்படை காரணம்.

இந்த வழக்கில் காவல்துறை சம்மன் கொடுத்து அழைப்பதற்கு முன்பாகவே பல பேர் தானாகவே முன்வந்து இந்த வழக்கு சம்பந்தமாக பொதுவெளியில் வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

தெய்வத்திற்கு சமமாக மதிக்கப்பட வேண்டிய சிறுமிகளை ஈவு இரக்கமில்லாமல் ஆர். வீரமணி மட்டும் சீரழித்தானா? (அல்லது) நாடு முழுவதும் கிரானைட் குவாரி டெண்டர் எடுப்பதற்காக தனது தொழில் நிமித்தமாக காரியம் சாதித்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் சிறுமிகளை அனுப்பி வைத்தானா? இதுதான் அவனது முக்கிய தொழிலா? இதன் மூலமாகத்தான் இவ்வளவு பணம் சம்பாதித்தானா? என்பது குறித்தும் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும். மேலும், நாடு முழுவதும் காணாமல் போன சிறுமிகள் மற்றும் பெண்கள் நிலை குறித்த தகவல்களையும் அவற்றின் உண்மை தன்மை குறித்தும் புலன் விசாரணை செய்ய வேண்டும். இந்த வீரமணியின் குற்ற நடவடிக்கையால் இதுவரை யாருக்காவது உயிர் பலி ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து இவனுக்குத் தரகு வேலை பார்த்த தம்பதியிடமும், இவனது நிறுவனத்தில் வேலை பார்த்த மற்றும் தற்போது பணியில் இருக்கும் நபர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

ஆர்.வீரமணியின் தொழில் சாம்ராஜ்யம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பரந்து விரிந்து கிடப்பதால் இவனது நடவடிக்கையில் பல மர்மங்கள் இருக்கக்கூடும். அவசியம் ஏற்பட்டால் சர்வதேச போலீஸ் உதவியுடன் அவனது தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் சோதனை நடக்க வேண்டும்.

அதற்கு என்ன வழி?

சர்வதேச அளவில் தொழில் செய்யும் ஒருவர் தமிழ்நாட்டில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டால் உலகம் முழுவதும் உள்ள அவரது நிறுவனத்தில் தமிழ்நாடு போலீஸ் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்யலாமா?

ஆம், சர்வதேச அளவில் தொழில் செய்யும் ஒருவர் தமிழ்நாட்டில் போக்சோ (POCSO) வழக்கில் கைது செய்யப்பட்டால், அவருக்கும் அவரது நிறுவனங்களுக்கும் இந்த வழக்குடன் நேரடி அல்லது மறைமுகத் தொடர்பு இருக்கும் பட்சத்தில், தமிழ்நாடு போலீஸ் உலகம் முழுவதும் உள்ள அவரது நிறுவனங்களில் விசாரணை நடத்த சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

இருப்பினும், இந்தியாவிற்கு வெளியே மற்றொரு நாட்டின் எல்லையில் தமிழ்நாடு காவல்துறை தன்னிச்சையாக நேரடியாகச் சென்று விசாரணை நடத்த முடியாது. அதற்கு சில சர்வதேச சட்ட நடைமுறைகளையும், மத்திய அரசின் அனுமதியையும் அவர்கள் பின்பற்ற வேண்டும்.

வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் விசாரணை நடத்துவதற்கான சட்ட வழிகள் மற்றும் நடைமுறைகள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

1. வழக்குடன் நிறுவனத்திற்கு உள்ள தொடர்பு (Nexus of the Crime)

  • குற்றவாளியின் வெளிநாட்டு நிறுவனங்கள் மூலமாக இந்த போக்சோ குற்றத்திற்கு ஏதேனும் நிதியுதவி (Funding) செய்யப்பட்டிருந்தாலோ,
  • நிறுவனத்தின் டிஜிட்டல் சாதனங்கள், சர்வர்கள் அல்லது மின்னஞ்சல்கள் இந்த குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருந்தாலோ (எடுத்துக்காட்டாக: குழந்தை பாலியல் ஆபாசப் படங்கள் அல்லது வீடியோக்களைப் பகிர்வது),
  • குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தனது நிறுவனத்தின் பெயரிலோ, கல்வி உதவித்தொகை (Scholarship) அல்லது வேலைவாய்ப்பு தருவதாகக் கூறியோ ஏமாற்றியிருந்தாலோ, அந்த நிறுவனங்களில் விசாரணை நடத்த முழு அதிகாரம் உண்டு.

2. வெளிநாட்டில் புலனாய்வு செய்வதற்கான சட்ட நடைமுறைகள் (Legal Procedures)

இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (தற்போது பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா – BNSS / முந்தைய CrPC) வெளிநாடுகளில் விசாரணை நடத்த பின்வரும் வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன:

  • கடிதக் கோரிக்கை (Letter Rogatory – LR): தமிழ்நாடு காவல்துறை, சம்பந்தப்பட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தின் மூலமாக, குற்றம் சாட்டப்பட்டவரின் நிறுவனங்கள் அமைந்துள்ள நாட்டின் நீதிமன்றத்திற்கு ‘லெட்டர் ரோகட்டரி’ (Letter Rogatory) எனப்படும் அதிகாரப்பூர்வ கடிதக் கோரிக்கையை அனுப்பலாம். இதன் மூலம் அந்நாட்டுப் போலீசாரின் உதவியுடன் அங்குள்ள ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் மற்றும் சாட்சிகளைச் சேகரிக்க முடியும்.
  • பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம் (Mutual Legal Assistance Treaty – MLAT): இந்தியா பல நாடுகளுடன் இந்த MLAT ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. இதன் கீழ், இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு, வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் தமிழ்நாடு போலீஸ் விசாரணையை மேற்கொள்ளலாம்.
  • இன்டர்போல் (Interpol) உதவி: சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் மூலமாக, வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களின் சொத்து விவரங்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் தரவுகளைத் திரட்ட ‘புளூ கார்னர்’ (Blue Corner) அல்லது தகுந்த நோட்டீஸ்களைப் பயன்படுத்தலாம்.

3. டிஜிட்டல் மற்றும் நிதி ஆதாரங்களைக் கையாளுதல்

  • சர்வதேச வங்கி கணக்குகள் முடக்கம்: குற்றம் சாட்டப்பட்ட நபரின் வெளிநாட்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவந்தால், மத்திய அரசின் அமலாக்கத்துறை (ED) அல்லது நிதிப் புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் தமிழ்நாடு போலீஸ் அந்த கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கலாம்.
  • தரவுப் பகிர்வு (International Data Regulations): நிறுவனத்தின் சர்வர்கள் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்தால், சர்வதேச தரவுப் பகிர்வு விதிகளின்படி (உதாரணமாக அமெரிக்காவின் CLOUD Act போன்ற சட்டங்கள் மற்றும் கூகுள், மெட்டா போன்ற நிறுவனங்களின் உலகளாவிய கொள்கைகள்) குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ சட்ட விவகாரங்களில் புலனாய்வு அமைப்புகளுக்குத் தேவையான டிஜிட்டல் சான்றுகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபரின் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ குற்றத்திற்கும் தொடர்பு இருப்பதை நீதிமன்றத்தில் முதற்கட்டமாக நிரூபித்து, உரிய சர்வதேச சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி உலகம் முழுவதும் உள்ள ஆர். வீரமணி நிறுவனங்களில் தமிழ்நாடு போலீஸ் சட்டப்பூர்வமாக விசாரணை நடத்த முடியும்.

தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்தை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் மனது வைத்தால், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உண்மையானக் குற்றவாளிகள் அனைவரையும் கொத்தாகக் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க முடியும். அதை தான் தமிழ்நாட்டு மக்களும் விரும்புகிறார்கள்.

Leave a Reply