11-வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடிய தேசிய ஷோவா ரிக்பா நிறுவனம்.

லடாக் யூனியன் பிரதேசத்தின் லே-யில் உள்ள தேசிய ஆயுர்வேத கல்வி நிறுவனமான ஷோவா ரிக்பா, 11-வது ஆயுர்வேத தினத்தைக் கொண்டாடியது.

‘எதிர்காலத்திற்கான ஆயுர்வேதம் என்ற கருப்பொருளுடன் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேசிய ஷோவா ரிக்பாவின் தலைவர் டாக்டர் பத்மா குர்மெட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், லடாக் பகுதிகளிலிருந்தும் இமயமலை பிராந்தியம் லாஹெளல், தர்மசாலா, சிக்கிம், அருணாச்சலப் பிரேதசம் ஆகிய பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வின்போது, சமகாலத்தில் பாரம்பரிய மருத்துவ முறைகளின் முக்கியத்துவம் குறித்து உரையாடல் நடைபெற்றது. ஆரோக்கியமான நல்வாழ்வை வழங்குவதில் ஆயுர்வேதம் உள்ளிட்ட பிற பாரம்பரிய மருத்துவங்களின் பங்களிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாரம்பரிய மருத்துவத்தைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மூலம் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து பலதுறை அறிஞர்கள் எடுத்துரைத்தனர்.

பாரம்பரிய மருத்துவக் கல்வி, நடைமுறைகளின்படி, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை இந்தக் கொண்டாட்டம் வழங்கியது.

Leave a Reply