மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் இடையே புதிய தினசரி ரயில் சேவையைத் தொடங்க இந்திய ரயில்வே ஒப்புதல்.

கான்பூர் – தில்லி இடையே இரவு நேர ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் வகையில் மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் இடையே புதிய தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.  மத்திய கான்பூர் – ஆனந்த் விஹார் – மத்திய கான்பூர் இடையே ரயில் எண்: 14153/14154 என்ற எண் கொண்ட ரயில் இயக்கப்படும்.

மத்திய கான்பூரிலிருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 4:50 மணிக்கு ஆனந்த விஹார் சென்றடையும்.

மறுமார்க்கத்தில் ஆனந்த் விஹாரிலிருந்து இரவு 11:25 மணிக்கு புறப்படும் ரயில் அடுத்த நாள் காலை 7:25 மணிக்கு மத்திய கான்பூர் சென்றடையும். 428 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 10 நிமிடங்களில் இந்த ரயில் கடக்கும்.

Leave a Reply