கடல்சார் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் பிரான்ஸ் சென்றடைந்தது.

இந்தியா – பிரெஞ்சு கடற்படை இடையே 24-வது இருதரப்பு கடல்சார் பயிற்சியான வருணாவில் பங்கேற்பதற்கு ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் 2026 செப்டம்பர் 22 அன்று பிரான்ஸின் டூலான் நகரை சென்றடைந்தது.

இந்த வருணா பயிற்சி, துறைமுகத்திலும், கடலிலும் நடைபெறும். இருதரப்பு கப்பல்களைப் பார்வையிடுதல், கலந்துரையாடல்கள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவையும் இடம் பெறும். இது இருநாட்டு கடற்படைகளும் தங்களுடைய அனுபவங்களையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்ளவும், ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பரஸ்பரம் புரிந்து கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்படுத்தும்.

இப்பயணம் இந்தியாவிற்கும், பிரான்சுக்கும் இடையேயான வலுவான, நீடித்த கடல்சார் நட்புறவை சுட்டிக்காட்டுவதோடு, இருநாடுகளுக்கும் இடையேயான கடல்சார் ஒத்துழைப்பின் விரிவடைந்து வரும் நோக்கத்தையும் வலுப்பெற்று வரும் நட்புறவுகளையும் பிரதிபலிக்கிறது.

Leave a Reply