இந்தியா – ஜப்பான் இடையேயான கூட்டு விமானப்படைப் பயிற்சி ஜோத்பூரில் நிறைவடைந்தது.

இந்தியா விமானப்படை – ஜப்பான் வான் தற்காப்புப்படை இடையேயான இருதரப்புக் கூட்டு விமானப்படைப் பயிற்சியான வீர் கார்டியன் 2026 ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2026 செப்டம்பர் 22 அன்று நிறைவடைந்தது. இப்பயிற்சி இருநாட்டு விமானப்படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கும் உத்திசார் நட்புறவை வலுப்படுத்துவதற்கும் முக்கியத் தளமாக அமைந்தது. இந்திய விமானப்படை சார்பில் எஸ்யூ-30 எம்கேஐ, ரஃபேல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் விமானமான தேஜஸ் உள்ளிட்ட பல்வேறு வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. ஜப்பான் வான் தற்காப்புப்படை எஃப்-2ஏ ரக போர் விமானங்களுடன் பங்கேற்றது.

இக்கூட்டுப் பயிற்சி 14 நாட்கள் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர் தினத்தன்று, ஜப்பான் வான் தற்காப்புப்படை தலைமைத்தளபதி ஜெனரல் டேகிரோ மோரிடா, விமானப்படை தலைமைத்தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் ஆகியோர் ஜோத்பூர் விமானப்படை தளத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானத்தை இயக்கினார்கள்.

இப்பயிற்சியில் இந்திய-ஜப்பான் விமானப்படை பணியாளர்களுக்கு இடையே துறைச் சார்ந்த நிபுணர் பரிமாற்றங்கள், செயல்பாட்டு விவாதங்கள், பணி திட்டமிடல் கூட்டங்கள், பொறியியல் கலந்துரையாடல்கள், பராமரிப்பு நடைமுறை, வான்வெளி பாதுகாப்பு ஆகியவற்றில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

Leave a Reply