கூவம் ஆறு மறுசீரமைப்பு | விரிவான திட்ட அறிக்கை குறித்து முதலமைச்சர் ச ஜோசப் விஜய் ஆய்வு.

கூவம் ஆறு மறுசீரமைப்பு திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு 2026 – 2027 நிதிநிலை அறிக்கையில், சென்னை நதிகள் மறுசீரமைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து, கூவம் ஆறு மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

அதனடிப்படையில், இன்று நடைபெற்ற இக்கூட்டத்தில், முதல்வர் விஜய், கூவம் ஆற்றை அதன் இயற்கையான நிலைக்கு மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சீரமைப்பை உறுதிசெய்யவும், விரிவான திட்ட அறிக்கையைத் (DPR) தயாரிக்கும் பணிகளின் முன்னேற்றம் மற்றும் இத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள பல்வேறு வசதிகள், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும், பன்னாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தரநிலைகளை உறுதி செய்யும் வகையில் இதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதற்கான பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

Leave a Reply