மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், மத்திய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்த்லாஜே ஆகியோர் இணைந்து, பெங்களூருவில் இன்று (20.09.2026) மத்திய பட்டு வாரியத்தின் 77-வது நிறுவன நாள் நிகழ்ச்சியையும், பட்டுப் பொருட்கள் கண்காட்சியையும் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில், மூத்த அதிகாரிகள், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பட்டு உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. கிரிராஜ் சிங், நாட்டின் பட்டு வளர்ப்புத் துறையின் விரிவாக்கத்திற்கும், பட்டு உற்பத்தியாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். 2014-ல் 26,000 மெட்ரிக் டன்னாக இருந்த நாட்டின் பட்டு உற்பத்தி, இன்று 42,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2030-31-க்குள் இதை 60,000 மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், 2028-29-க்குள் பட்டு உற்பத்தியில் இந்தியாவை உலகளவில் முதலிடத்திற்கு உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று திரு கிரிராஜ் சிங் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பட்டு வாரியம் பல்வேறு அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டது. சிறந்த ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் பட்டு வாரியத்தின் பல்வேறு வெளியீடுகளும் பருவ இதழ்களும் வெளியிடப்பட்டன.
திவாஹர்
