எரிசக்தி, கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வகைப்படுத்தலை முன்னெடுத்துச் செல்கிறது கோல் இந்தியா நிறுவனம்.

கோல் இந்தியா லிமிடெட், தனது வழக்கமான நிலக்கரிச் சுரங்க நடவடிக்கைகளுக்கு அப்பால், எரிசக்தி, கனிமங்கள், ஆராய்ச்சி – மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்முகப்படுத்தப்பட்ட, தொழில்நுட்பம் சார்ந்த வணிகத் தொகுப்பைக் கட்டமைப்பதற்காகத் தொடர்ந்து தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் ஐந்து வலுவான பிரிவுகளில் கவனம் செலுத்தி வருகிறது. அவை:

*நிலக்கரி வாயுவாக்கம், நிலக்கரியிலிருந்து ரசாயனங்கள் தயாரித்தல்

  • அனல் மின்சாரம்

*புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

*முக்கிய கனிமங்கள்

  • இரும்புத் தாது உள்ளிட்ட பன்முகப்படுத்தப்பட்ட கனிமங்கள்

இந்தத் திட்டத்தொகுப்பில் ஏற்கனவே தேசிய அளவிலான திட்டங்கள் அடங்கியுள்ளன. அவற்றுள், நிலக்கரியிலிருந்து ரசாயனங்கள் தயாரிக்கும் நான்கு முன்னெடுப்புகள் உட்பட சுமார் ரூ. 69,346 கோடி மதிப்பிலான திட்டங்கள், சுமார் 550 மெகாவாட் சூரிய சக்தி திறன், மின்கட்டமைப்பு அளவிலான மின்கல சேமிப்பு அமைப்பு முன்முயற்சிகள், முக்கிய கனிமங்கள், அதனைச் சார்ந்த மூலப்பொருட்களில் உள்ள வாய்ப்புகள் ஆகியவை அடங்கும்.

Leave a Reply