ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ரஷ்யாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் ரஷ்யாவில் 2026 செப்டம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால பாதுகாப்பு நட்புறவு, ராணுவங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் பயணம் மேற்கொள்கிறார்.

இப்பயணத்தின்போது ராணுவத் தலைமைத் தளபதிக்கு, ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். பின்னர், மாஸ்கோவில் உள்ள அறியப்படாத வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று வீர மரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். ராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து ரஷ்ய ராணுவத் தலைமைத் தளபதி கர்னல் ஜெனரல் ஆண்ட்ரி நிக்கோலாயேவிச் மோர்ட்விச்சேவுடன் பேச்சு நடத்த உள்ளார்.

மாஸ்கோவில் உள்ள தேசிய பாதுகாப்புக் கட்டுப்பாட்டு மையத்திற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி அங்கு ரஷ்ய பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் திரு வாசிலி செர்ஜியேவிச் ஒஸ்மக்கோவ் உள்ளிட்ட ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்நிலை அதிகாரிகளுடன் உரையாட உள்ளார்.

Leave a Reply