இஓஎஸ்-05 செயற்கைக்கோள் தாங்கிய ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோவிற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

இஸ்ரோவின் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையைப் பாராட்டியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாட்டிற்குப் பெருமைத் தேடித் தரும் தருணம் என்று இதை வர்ணித்தார்.

இந்தியாவின் முதல் புவி சுற்றுப்பாதை சார்ந்த படமெடுக்கும் இஓஎஸ்-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, இந்திய விண்வெளித் துறையின் சிறப்பம்சம், புத்தாக்கம், வளர்ந்து வரும் திறன்களைப் பிரதிபலிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலியலிலும் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்தும் வகையில், இஸ்ரோவிற்கும் இந்திய தொழில்துறையினருக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புணர்வு, விண்வெளித் திட்டத்திற்கு புதிய ஆற்றலையும், விரிவான பரிமாணத்தையும் வழங்குவதாக திரு மோடி குறிப்பிட்டார்.

இஸ்ரோவின் இந்த வெற்றிக் குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பகிர்ந்ததாவது:

“இஸ்ரோவின் மற்றொரு சிறப்பான சாதனை மற்றும் நாட்டிற்கான பெருமைக்குரிய தருணம்.

இந்தியாவின் முதல் புவி சுற்றுப்பாதை சார்ந்த படமெடுக்கும் இஓஎஸ்-05 செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி-எஃப்17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது, இந்திய விண்வெளித் துறையின் சிறப்பம்சம், புத்தாக்கம் மற்றும் வளர்ந்து வரும் திறன்களைப் பிரதிபலிக்கிறது.

இஸ்ரோவிற்கும் இந்திய தொழில்துறையினருக்கும் இடையே வளர்ந்து வரும் நட்புணர்வு, விண்வெளித் திட்டத்திற்கு புதிய ஆற்றலையும், விரிவான பரிமாணத்தையும் வழங்குவதுடன், ஒட்டுமொத்த விண்வெளிச் சூழலியலிலும் இந்தியாவின் திறன்களை விரிவுபடுத்துகிறது.”

Leave a Reply