மும்பையிலிருந்து நைஜீரியாவிற்கு கடத்தப்படவிருந்த போதை மாத்திரைகளை வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

போதைப்பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றின் சட்ட விரோத உற்பத்தி, சர்வதேச அளவிலான கடத்தலுக்கெதிராக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 8 அன்று மும்பை விமான சரக்கு போக்குவரத்து வளாகத்தில் நைஜீரியாவிற்கு அனுப்பப்பட இருந்த சரக்கு ஒன்றைக் கண்டறிந்தது. அதில், 300 மில்லிகிராம் பிரிகபாலின் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடைபெற்ற சோதனையில் ஏற்றுமதிக்காக அந்த சரக்கிற்குள் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டிரமடால் ஹைட்ரோ குளோரைடு மாத்திரைகளும், 1 லட்சம் டேபன்டால் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

திவாஹர்

Leave a Reply