போதைப்பொருள் மற்றும் மனநலனைப் பாதிக்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றின் சட்ட விரோத உற்பத்தி, சர்வதேச அளவிலான கடத்தலுக்கெதிராக வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
அந்தவகையில், 2026 ஆகஸ்ட் 8 அன்று மும்பை விமான சரக்கு போக்குவரத்து வளாகத்தில் நைஜீரியாவிற்கு அனுப்பப்பட இருந்த சரக்கு ஒன்றைக் கண்டறிந்தது. அதில், 300 மில்லிகிராம் பிரிகபாலின் மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடைபெற்ற சோதனையில் ஏற்றுமதிக்காக அந்த சரக்கிற்குள் வைக்கப்பட்டிருந்த 1 லட்சம் டிரமடால் ஹைட்ரோ குளோரைடு மாத்திரைகளும், 1 லட்சம் டேபன்டால் மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
திவாஹர்
