மோசடியான ஏர் சுவிதா 2.0 இணையதளங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்.

சில மோசடி வலைதளங்களும் இணையதளங்களும், ஏர் சுவிதா 2.0 போல் தங்களை வடிவமைத்து, பயணிகளைப் பணம் செலுத்தும் நுழைவாயில்களுக்குத் திசைதிருப்பி தவறாக வழிநடத்துவது சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது.

ஏர் சுவிதா 2.0 சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன என்றும், சுய அறிவிப்புப் படிவத்தைச் சமர்ப்பிக்க எந்தக் கட்டணமும் தேவையில்லை என்றும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. ஏர் சுவிதா 2.0-க்கான ஒரே அதிகாரப்பூர்வ இணையதளம்: https://airsuvidha.civilaviation.gov.in/

பயணிகள், எந்தவொரு தனிப்பட்ட அல்லது பயணம் தொடர்பான தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும், இணையதளத்தின் முகவரியைக் கவனமாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் ஏர் சுவிதா 2.0 சேவைகளை வழங்குவதாகக் கூறும் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு இணையதளத்திலும் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பயணிகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்துமாறும், நம்பகமான தகவல்களுக்கு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே சார்ந்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த அறிவுறுத்தல் பயணிகளின் விழிப்புணர்வுக்காகவும், பொதுப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply