குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன், மே 29 முதல் 31, 2026 வரை கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.
மே 29 அன்று, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறும், ‘வாழும் கலை’ அறக்கட்டளையின் 45-வது ஆண்டு நிறைவை குறிக்கும் உலக அளவிலான கொண்டாட்டத்தில், குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கிறார். பின்னர், கர்நாடக மாநிலம் தாவணகெரேயில் அமைந்துள்ள ‘யுனிவர்சிட்டி பிடிடி பொறியியல் கல்லூரியின்’ பவள விழா கொண்டாட்டங்களில் அவர்பங்கேற்கிறார்.
மே 30 அன்று, கோவா மாநிலம் பனாஜியில் நடைபெறும், கோவா மாநில நிறுவன தினக் கொண்டாட்டங்களில், குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்கிறார். இதையடுத்து, கோவாவில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர் – தேசிய பெருங்கடலியல் நிறுவனத்திற்கு அவர்செல்கிறார்.
மே 31 அன்று, ‘ஸ்ரீ க்ஷேத்ர தர்மஸ்தல மஞ்சுநாத சுவாமி கோவிலுக்கு’ குடியரசு துணைத் தலைவர் சென்று வழிபடுகிறார். அதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் பெல்தங்கடியில் அமைந்துள்ள ‘எஸ்ஐஆர்ஐ தொழிற்பூங்காவை’ அவர் திறந்து வைக்கிறார்.
பின்னர், கேரள மாநிலம் செல்லும் அவர் கோட்டயத்தில் நடைபெறும் ‘தீபிகா மலையாள நாளிதழின்’ 140-வது நிறுவன தினக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேலும், மாநிலங்களவை உறுப்பினரான திரு சி. சதானந்தன் மாஸ்டர் ஏற்பாடு செய்துள்ள தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அவர் கண்ணூருக்கும் செல்கிறார்.
திவாஹர்
